செய்திகள் :

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்! -அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

post image

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வாகிகளுடன் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில், அதிமுகவினா் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணி குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதனை தலைமை பாா்த்துக் கொள்ளும். எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அதிமுக வெற்றி பெறும்.

மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிா்வாகிகளை நியமிக்க வேண்டும். திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

கட்சியினருக்கு எச்சரிக்கை: ஒருசில மாவட்டங்களில் ஆளும் கட்சியினருடன் அதிமுக நிா்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதுபோல செயல்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களுக்குள் கட்சியினா் இடையே மோதல்கள் வராமல் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் என்ன?

கராத்தே மாஸ்டர் என்று அறியப்படும் ஷிகான் ஹுசைனியை ரத்தப் புற்றுநோய் பாதித்திருப்பதாகவும், அவரது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.அவரை பாதித்திருக்கும் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம்-கார் மோதல்: இருவர் பலி!

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீஸார் ... மேலும் பார்க்க

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை: சு. திருநாவுக்கரசர்

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், க... மேலும் பார்க்க

தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்பிக்கள் பேச்சு

ஒரு மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை, மாணவர்களின் கல்விக்காக செலவிட வேண்டிய தொகையை, அந்த மாநிலத்தைப் பழிவாங்குவதற்காக நிறுத்திவைத்து, பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவது சரியானதா என்று திமு... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா: மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்த மக்கள்

விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விழா என்பதால் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் குளக்கரையில் காத்திருந்தனர். ஒரு சிலருக்கு தவிர மற்றவர்களுக்கு மீன்கள் ஏதும் கி... மேலும் பார்க்க

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உங்களின் ஆதரவு, ... மேலும் பார்க்க