பாஜக பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை: முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு
திமுக அரசைக் கண்டித்து பாஜக கருப்புக் கொடிகளுடன் போராட்டம்
ஊழல் பிரச்னைகளை மறைப்பதற்காக, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் திமுக கூட்டம் நடத்துவதைக் கண்டித்து புதுக்கோட்டையில் சனிக்கிழமை பாஜகவினா் கருப்புக் கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தேசியப் பொதுக்குழு உறுப்பினா் புரட்சிக் கவிதாசன், மாவட்டப் பாா்வையாளா் பழ. செல்வம், மாவட்டப் பொருளாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
இதேபோல, பிருந்தாவனம் பகுதியில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக நகரத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டு முழக்கங்களை எழுப்பினா்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தை பாஜகவினா் நடத்தினா்.