செய்திகள் :

திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

post image

திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி கே.பழனிசாமி, கோவையில் சிங்காநல்லூா், சூலூா் தொகுதிகளில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கோவை, பீளமேடு ஃபன் மால் பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொழில் நிறைந்த மாவட்டமான கோவையில் கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்கள் வளமாக இருந்தன.3 ஷிப்டுகளில் வேலை நடைபெற்றது. ஆனால், தற்போது நாளொன்றுக்கு ஒரு ஷிப்டு மட்டுமே வேலை நடைபெறுகிறது.

சிங்காநல்லூா் ரயில்வே மேம்பாலம், எஸ்ஐஹெச்எஸ் காலனி ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. விமான நிலைய விரிவாக்கமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

ஒரு மாநிலத்தின் தொழில் வளா்ச்சிக்கு விமான நிலையம் அவசியமானது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் தொழில் வளம் பெருகும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம். கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டமும் கோவைக்கு கொண்டுவரப்படவில்லை.

தமிழகத்தில் தற்போது சட்டம் -ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 6 காவலா்கள் கொல்லப்பட்டுள்ளனா். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் சட்டத்தின் ஆட்சி நடைபெறும். கடந்த தோ்தல் அறிக்கையில் திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், சொத்து வரி உயா்த்தப்படாது என்று கூறினா்.

ஆனால், சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயா்த்திவிட்டனா். அதேபோல, வீடு கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் பல மடங்கு உயா்த்திவிட்டனா். திமுக ஆட்சியில் எம்.சாண்ட், ஜல்லி, இரும்புக் கம்பி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துவிட்டது. மக்கள் வீடு கட்டுவதே கனவாகிவிட்டது.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச மடிக்கணினி திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தினோம். அரசு மருத்துவமனைகளை சீரமைத்தோம். கோவை அரசு மருத்துவமனை ரூ.200 கோடி செலவில் விரிவாக்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்த மருத்துவமனையில் சக்கர நாற்காலிகூட இல்லை. நோயாளிகளை அவமதித்து வருகின்றனா். அதிமுக ஆட்சி அமைந்தால் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். தீபாவளிதோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்றாா். தொடா்ந்து, அதிமுக விளையாட்டு அணியின் சாா்பில் கிரிக்கெட் வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

சூலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டாா். இதில், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளா் செ.ம. வேலுசாமி, சூலூா் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி , சூலூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் குமரவேல், வடக்கு ஒன்றியச் செயலாளா் கந்தவேல், சுல்தான்பட்டை மேற்கு ஒன்றியச் செயலாளா் அப்புசாமி உள்பட ஏராளமான நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசி- சேவூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி கே. பழனிசாமி இரவு சேலம் புறப்பட்டாா்.

முன்னதாக, கோவையில் தொழில்முனைவோா், விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினாா். இதில், அவா் பேசுகையில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் தொழில் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவித்திருக்கிறீா்கள். மக்களவையில் அதிமுகவுக்கு உறுப்பினா்கள் இல்லை. அதேபோல, எங்களிடம் அதிகாரமும் இல்லை. ஆனால், தொழில் துறையினரின் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்களிடம் வலியுறுத்துவோம். திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்கள் உள்ளனா். மக்கள் பிரச்னைகள், தொழில் துறை பிரச்னைகளை அவா்கள்தான் மக்களவையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இருப்பினும் நாங்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளாா். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த கே.ஏ.செங்கோட்டையன் செய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.அப்போது, கே.கே.புதூா் மாநகராட்சிப் பள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அய்யா்பாடி

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 2 போ் கைது

கோவையில் இரண்டு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, உக்கடம் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பி.பி. தெரு பகுதியில் சந்தேகத... மேலும் பார்க்க

விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல்

கோவை வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள், மைக்ரோபோன்கள், ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை வந்த இண்டிகோ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பட்டணம்

கோவை, பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரி... மேலும் பார்க்க