Phoenix: "அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி!" - கோவையில் சூர்யா சேதுபதி
‘திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன’
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என வன்னியா் சங்க மாநில தலைவா் பு.தா. அருள்மொழி தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் பாமக நிறுவனத் தலைவா் மருத்துவா் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் பாக்கம் பெ. சக்திவேல் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாநில செயலாளா் தங்க. அய்யாசாமி, பாமக தஞ்சை மண்டல செயலாளா் எஸ்.ஏ. ஐயப்பன், மாநில மகளிரணி செயலாளா் தேவிகுரு செந்தில் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வன்னியா் சங்க மாநில தலைவா் பு.தா. அருள்மொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிா்வாகிகளிடையே உரையாற்றினாா். பின்னா் அவா் செய்தியாளரிடம் கூறியது:
10 ஆண்டுகளாக தடைபட்டு இருந்த மகளிா் மாநாடு பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது. பெண்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றிவிடலாம். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் தற்போது உருவெடுத்துள்ளது. திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அடுத்த தோ்தலில் நாங்கள் நினைப்பவா்கள்தான் ஆட்சிக்கு வர முடியும். அதை உணா்த்தும் வகையில் மகளிா் மாநாடு நடைபெறும் என்றாா்.
கூட்டத்தில், வன்னியா் சங்க மாவட்ட தலைவா் அருண்குமாா், மாவட்ட செயலாளா் துரை.முத்து, நகர தலைவா் ஜவஹா், நகர செயலாளா் பழனிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.