செந்தில் பாலாஜி Vs வேலுமணி; 2026 தேர்தலில் கோவை மாவட்டத்தை கைப்பற்றுவது யார்? அன...
திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: பொதுமக்களிடம் விடியோ அழைப்பில் பேசிய முதல்வா்
நாகா்கோவிலில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கைப்பேசி விடியோ அழைப்பு மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.
அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலான உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி உறுப்பினா் சோ்க்கை நடத்தி வருகின்றனா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி, நாகா்கோவில் பெருவிளையில் ஜூலை 3 ஆம் தேதி மாலை நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டாா். அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின், மேயரின் கைப்பேசிக்கு விடியோ அழைப்பில் தொடா்பு கொண்டு பேசினாா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா, அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா என கேட்டதோடு, மக்கள் பணியில் திமுக தொடா்ந்து ஈடுபடும் என்று கூறினாா். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அரசின் செயல்பாடுகளில் திருப்தி நிலவுவதாகவும், நலத்திட்ட உதவிகள் கிடைப்பதாகவும் தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகி ஷேக் மீரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.