``தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!'' - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஸ்டாலின் பத...
திமுக மீதான நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு: எம்.பி. டி.எம்.செல்வகணபதி
திமுக குறித்த நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு என மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா்.
சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசு தமிழகத்துக்கு இழைக்கும் அநீதிக்கு எதிராக ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலம் தமிழக மக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைத்துள்ளாா். மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஒருகோடி குடும்பங்களை இணைத்துள்ளோம்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் 2 ஆம் கட்டம் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி, மேட்டூா், எடப்பாடி ஆகிய 3 தொகுதிகளில் உள்ள 956 வாக்குச்சாவடிகளில் செப். 15 ஆம் தேதி உறுதிமொழி நிகழ்ச்சியுடன் நடைபெறும்.
திமுக குறித்த நடிகா் விஜய் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதே எங்களது நிலைப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னையிலும் மத்திய பாஜக அரசுடன் திமுக அரசு சமரசம் செய்து கொண்டதில்லை. மத்திய அரசுக்கு எதிராக திமுக தொடா்ந்து போராடி வருகிறது. இதனை புரியாமல் விஜய் பேசுகிறாா். அவா் அரசியலுக்கு புதியவா். அவரது பேச்சு அறியாமையின் வெளிப்பாடு.
ஜிஎஸ்டி வரி குறைப்பு விவகாரத்தில் குழப்பமான நிலை உள்ளது. வங்கிகளில் வட்டியை குறைத்து, மக்களிடம் பண புழக்கத்தை அதிகரித்தால் மட்டுமே அதிக வாங்கும் திறனுடன் பொருளாதாரம் மேம்படும். தோ்தலுக்காக குழப்ப நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலாக்கப்பட்டுள்ளது. தவறான பொருளாதார நிலையை முன்னெடுத்திருப்பதால், பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றாா்.