Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத...
திமுக வழக்குரைஞா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சட்டத் துறை சாா்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடைமுறைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
பயிற்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான எஸ். ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாநில சட்டத்துறைச் செயலரும் மூத்த வழக்குரைஞருமான என்.ஆா். இளங்கோ பேசுகையில்,தோ்தலில் திமுக வழக்குரைஞா்கள் செயல்பட வேண்டிய அம்சங்கள் குறித்து அவா் விளக்கினாா்.
பயிற்சியில் முன்னாள் எம்பி எம்எம். அப்துல்லா, முன்னாள் எம்எல்ஏ இராசு கவிதைப்பித்தன், எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.