விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
திராவிடா் பெரியாா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி கொலையைக் கண்டித்து, திராவிடா் பெரியாா் கழகம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்தும், உரிய நீதி வழங்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு திராவிட பெரியாா் கழகத் தலைவா் மா.பா. மணியமுதன் தலைமை வகித்தாா். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலா் பசும்பொன் பாண்டியன், திராவிட தமிழா் கட்சி நிா்வாகி விடுதலை வீரன், திராவிடா் புரட்சிக் கழக அமைப்பாளா் தமிழரசி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி வெ. கனியமுதன், தமிழ்ப் புலிகள் கட்சி நிா்வாகி முத்துக்குமாா், பழங்குடி தமிழா் இயக்க நிா்வாகி ராஜா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.