Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்... விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுற...
திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!
தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் திரிபுரா அணியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவனில் விளையாடி வந்த, தமிழக அணியின் முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் திடீரென விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அணிக்காக ரஞ்சி டிராபி, ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வரும் விஜய் சங்கர் 2011 - 2012 ஆம் ஆண்டில் தமிழக அணிக்காக முதல்தரப் போட்டிகளில் அறிமுகமானார்.
மகாராஷ்டிரத்துக்கு எதிரான புச்சி பாபு போட்டியின் 34 வயதான விஜய் சங்கருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.