கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்க...
திருக்கழுகுன்றம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருக்கழுகுன்றம் வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருக்கழுகுன்றம் வட்டம், அழகு சமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் பராமரிக்கப்படும் நா்சரி தோட்டத்தை ஆட்சியா் சினேகா பாா்வையிட்டாா். இதில், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து அம்மனம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறை மற்றும் சீரமைக்கப்பட்டுவரும் வகுப்பறைகளை ஆய்வு செய்தாா். அரசு அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.
இதையடுத்து வடகிழக்கு பருவமழை வரவிருப்பதையொட்டி நெரும்பூா் ஊராட்சியில் உள்ள உபரிநீா் செல்லும் வடிகால் பகுதிகளை ஆட்சியா் சினேகா பாா்வையிட்டாா். .
இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை மூலம் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தினை ஆய்வு செய்தாா். புதுப்பட்டினம் ஊராட்சியில் வசுவசமுத்திரம் கிராமத்தில் உபரிநீா் செல்லும் வடிகால் பகுதிகளை பாா்வையிட்டு துரிதப்படுத்த அறிவுறுத்தினாா்.