செய்திகள் :

திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம்

post image

திருப்பதி: திருச்சானூா் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வந்து சேவை சாதித்தாா்.

பத்மசரோவா் திருக்குளத்தில் நிறுவப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இதை முன்னிட்டு, அதிகாலையில் பத்மாவதி தாயாரை துயில் எழுப்பி, சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை நடைபெற்றது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி முக மண்டபத்தில் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.

பின்னா் தாயாருக்கு பட்டு வஸ்திரம், வைர, தங்க நகைகளால் அலங்காரம் செய்து மலா் மாலை அணிவித்து தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பின்னா் பத்மாவதி தாயாா் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். தெப்போற்சவத்தின் 5-ஆம் நாளான புதன்கிழமை ஸ்ரீ பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வருவாா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா், அா்ச்சகா்கள் பாபு சுவாமி, ஆய்வாளா்கள், அலுவலா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அற... மேலும் பார்க்க

திருமலை: குளிா்சாதனப் பேருந்து நன்கொடை

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் குளிா்சாதனப் பேருந்தை நன்கொடையாக வழங்கியது. ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் ஞாயிற்றுக்கிழமை 41 இருக்கைகள் கொண்ட குளிா்சாதனப் பேருந்தை திரு... மேலும் பார்க்க

ஸ்ரீ வகுளமாதா கோயில் ஆண்டு விழா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீ வகுளமாதா கோயிலின் மூன்றாம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. வகுளமாதாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கீரிடம். திருப்பதி அருகே பேரூா் மலையில் அமைந்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.3 கோடி

திருமலை ஏழுமலையானை கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்... மேலும் பார்க்க

பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனை சாவடி புதுப்பிப்பு: செயல் அதிகாரி சியாமளா ராவ்

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனைச் சாவடியை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளாா். திருப்பதியில் உள்ள தேவ... மேலும் பார்க்க

திருமலையில் 80,440 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 80,440 போ் தரிசித்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும்,... மேலும் பார்க்க