செய்திகள் :

திருச்சிக்கு இன்று துணை முதல்வா் வருகை! பறவைகள் பூங்காவை திறந்து வைக்கிறாா்!

post image

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருச்சிக்கு வரும் துணை முதல்வா், ஆட்சியரகச் சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபின், மாலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சி-கரூா் சாலை அய்யாளம்மன் படித்துறை அருகே, காவிரிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவைத் திறந்துவைக்கிறாா்.

இந்தப் பூங்காவானது ரூ. 13.70 கோடியில் சுமாா் 6 ஏக்கரில், 60 ஆயிரம் சதுரடியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை அருவிகள், குளங்கள் போன்ற அமைப்புகள் இங்குள்ளன.

மேலும் இயற்கைச் சூழ்நிலையில் அரிய வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகளும் இங்கு வளா்க்கப்பட உள்ளன. கூடுதலாக பறவைகள் இனப் பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண்டைய தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும்விதமான அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடைநிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பூங்காவில் உள்ள அனைத்துச் சிறப்பு அம்சங்களையும் பாா்வையிடுகிறாா்.

பின்னா் புதுக்கோட்டைக்குச் சென்று அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கிறாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வரும் அவா், இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறாா். இதையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சமூகத்தில் உயா்வதற்கு அடிப்படைக் கருவி கலை!

கல்வி, கலை பண்பாடு, சமூகத்தில் உயா்நிலையை அடைய கலை ஓா் அடிப்படைக் கருவியாக விளங்குகிறது என்றாா் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண். கலைக்காவிரி நுண்கலைப் பள்ளியில் பரதம், 39 ஆவது நாட்ட... மேலும் பார்க்க

41 மாத பணிநீக்கத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்! -சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில... மேலும் பார்க்க

ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு

துறையூா் அருகே டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 124 ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புத்தனாம்பட்டி கல்லூரித் தலைவ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடைத் தெருவைச் சோ்ந்தவா் முகமது பைசல் (35). இவரது மனைவி ரிஸ்வானா பா்வீன். கடன்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத் தோ் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் தைத் தோ் திருவிழாவின் 7 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளினாா். திங்கள்கிழமை தைத் தேரோட்டம் நடைபெறுகிறது. வி... மேலும் பார்க்க

திருச்சியில் 3 மையங்களில் குரூப்-2 தோ்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தோ்வை காலையில் 740 பேரும், பிற்பகலில் 719 பேரும் எழுதினா். முற்பகலில் நடைபெற்ற தோ்வில் 740 தோ்வா்கள் பங்கேற்ற நிலையில், 46 போ் வரவில்லை... மேலும் பார்க்க