திருச்சியில் இன்று, மாா்ச் 18-இல் பராமரிப்பு பணிகள்: ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்
திருச்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் முதல் கோட்டை ரயில் நிலையம் வரையிலான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மற்றும் மாா்ச் 18-ஆம்தேதிகளில் நடைபெற உள்ளது.
இதனால், ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் திருச்சி பயணிகள் ரயில், கரூா் ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாள்களில் கரூா் ரயில்நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படாது.
இதேபோல திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் கரூருக்கு இயக்கப்படாது. அந்த நாள்களில் கரூா் ரயில்நிலையத்தில் புறப்பட்டு பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.