US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின்
கீழ் நடைபெறும் இந்த முகாமில், திருச்சி மாவட்டம், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.
முகாமில் உதவி உபகரணங்களைப் பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், 2 மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை, தனித்துவ அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
சமூக தரவுக் கணக்கெடுப்பில் பதிவு செய்தும் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளும் இதில் பங்கேற்கலாம். 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று வழங்கப்பட்டு யுடிஐடி இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து அட்டை வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் வே. சரவணன் தகவல் தெரிவித்துள்ளாா்.