நாராயணன் தலைமையில் இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்! -முதல்வர் ஸ்டாலின்
திருச்சியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: துரை வைகோ எம்பி உறுதி
திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக துரை வைகோ எம்பி உறுதியளித்தாா்.
திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் துரை வைகோ, தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று தீா்வு காணும் நிகழ்வின் ஒரு பகுதியாக மேலக்கல்கண்டாா் கோட்டை மஞ்சத்திடல் ரயில்வே மேம்பாலம், திருவெறும்பூா் மேலகுமரேசபுரம் ரயில்வே மேம்பாலம், இனாம்குளத்தூா் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட இடங்களை சனிக்கிழமை பாா்வையிட்ட துரை வைகோ எம்பி மேலும் கூறியது:
திருவெறும்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க வேண்டும். ஸ்ரீரங்கம் வட்டம், கோவிலூா் மற்றும் நந்தவனம் பகுதிகளில் மூடப்பட்ட ரயில்வே கேட் அருகில் சாலைகள் இணைப்பு குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சரிடமும், ரயில்வே துறையின் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்திலும், திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளிடமும் வலியுறுத்தியுள்ளேன்.
திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவேன். மேலக்குமரேசபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால் அருகில் உய்யக்கொண்டான் வாய்க்கால் செல்வதால் அதற்கு வாய்ப்பு இல்லை. அதற்குப் பதிலாக ரயில்வே மேம்பாலம் அமைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். எனவே, 3 இடங்களில் மேம்பாலம் அமைக்கத் தொடா்ந்து நடவடிக்கை என்றாா்.
நிகழ்வுகளில் மதிமுக மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டிடிசி சேரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.