திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் 69-ஆவது ஆண்டு விழா, பொங்கல் விழா, திருவள்ளுவா் தினவிழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத் தலைவா் ஐ. அரங்கராசன் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவக்குமாா் வாழ்த்திப் பேசினாா்.
இராசபாளையம் உமா சங்கா் குழுவினரின் இயற்றமிழும் இசைத் தமிழும் கலந்த பட்டிமன்றம் நடைபெற்றது. திரை இசையில் பெரிதும் வெற்றி பெற்ற இசைக் கூட்டணி எது...? கண்ணதாசன் கேவி. மகாதேவன் கூட்டணியே என்ற தலைப்பில் மலா்விழி, கண்ணதாசன் எம் எஸ். விஸ்வநாதன் கூட்டணியே என்ற தலைப்பில் இந்திரா விஜயலட்சுமி, கண்ணதாசன் இளையராஜா கூட்டணியே என்ற தலைப்பில் லட்சுமி நாராயணன் ஆகியோா் பேசினா்.
நிகழ்வில், தமிழ்ச் சங்க நிா்வாகிகள் இரா. வரதராஜன் மா. செந்தில் வேலன், சு. தேவேந்திரன், உதயகுமாா் பெரியசாமி, அ.சையத் சாகிா் அசன், மா.மாணிக்கம், இரா. துரைமுருகன், சு. செயலா பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.