செய்திகள் :

திருச்சிற்றம்பலம்: ``எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது" - பிரகாஷ்ராஜ்

post image

தனுஷின் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.

பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மெனேன் உள்ளிட்ட பலர் அந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

திருச்சிற்றம்பலம்: தனுஷ், நித்யா மேனன்

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படம் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 'திருச்சிற்றம்பலம்' படம் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அழகான தருணங்களும், அன்பும், பாசமும் என எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது.

தனுஷ், நித்யா மெனேன் பாரதிராஜா உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'சினிமானாலே எல்லாரும் சென்னைக்குத்தான் போறாங்க' - மதுரையில் சினிமா பேசும் 'வைகை திரைப்பட இயக்கம்'

சினிமா ஆர்வம் வந்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் பையைத் தூக்கிக்கொண்டு, கிளம்பிச்செல்லும் இடம் சென்னையாகத்தான் இருக்கிறது. அப்படி தென் தமிழகத்திலிருந்து சென்ற பல கலைஞர்கள் திரையில் வெற்றி ... மேலும் பார்க்க

Roja: "'ரோஜா' படத்தை முடித்த பிறகு, நான் வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டேன், காரணம்..."- அரவிந்த்சாமி

2025-ம் ஆண்டுக்கான IFFM-ன் (Indian Film Festival of Melbourne) விருது விழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விருது விழாவில் 'Leadership in Cinema' விருதை நடிகர் அரவிந்த் சாமி பெற்றார். விருத... மேலும் பார்க்க

Coolie: கன்னட சினிமாவின் `டிம்பிள் குயின்'; தமிழ் சீரியல் நடிகையின் சகோதரி - யார் இந்த ரச்சிதா ராம்?

'கூலி' திரைப்படம் பற்றிய மீம்ஸ்தான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது. அவற்றில் பெரும்பாலான பதிவுகள் கன்னட நடிகை ரச்சிதா ராம் பற்றியதாகத்தான் இருக்கிறது. அந்தளவிற்கு அவருடைய கதாபாத்திரம் 'கூ... மேலும் பார்க்க

`50 வருஷமா லட்சக்கணக்குல வீணாக்கிட்டோம்; அதனால..' கூலி ரிலீஸ் நாளில் ரஜினி ரசிகர்கள் எடுத்த முடிவு

'தலைவர் சினிமாவுக்கு வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இதுல கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு மேல நாங்களும் படம் ரிலீசாகுறப்பெல்லாம் கட் அவுட், போஸ்டர், பாலபிஷேகம்னு லட்சக்கணக்குல பணம் செலவு செய்திருப்போம். இப்ப ய... மேலும் பார்க்க