செய்திகள் :

திருச்சிற்றம்பலம் - குறுங்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்று

ஐப்பசி திங்கள் 15 ம் நாள், இரண்டு குதிரைகள் இரவின் நிழலாய் அதே சமயம், காற்றின் வேகத்தை ஊடறுத்து வேகமாக சென்று கொண்டிருக்க அதன் மேல் இரண்டு இளம் வீரர்கள் பேசிக்கொண்டு செல்கின்றனர்.

கருப்பா... இந்த ராத்திரி நேரத்துல, தலைவர் எதுக்காக உன்னை பார்க்க வந்தார்,

எங்க போயிட்டு இருக்கோம், இவ்வளவு வேகமாக கிளம்ப வேண்டிய அவசரம் என்ன..? பயணம் தொடங்கி ஒரு காத தூரம் வந்துட்டோம், இப்ப வரைக்கும் நீ ஒரு வார்த்தைக்கூட பேசல ஏன் கருப்பா...

குமரா பேசுறதுக்கோ, உன்னிடம் சொல்வதற்கோ எந்த தடையும் இல்லை. ஆனால் ஜோதிட கணக்கியலின் ஒரு சிக்கலான கணக்கை போட்டுக்கொண்டு வந்தேன். அதனால் தான் அந்த அமைதி.

ஜோதிட கணக்கா..? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்கிறாயா...

எனக்கே இது புதிது தான் குமரா.. நாம் நம் தலைவரின் உத்தரவின் பேரில், முதுவர் நல்லமரிடம் செல்கிறோம். இதில் என்ன விசித்திரம் என்றால், நாளை காலை முற்பகலுக்கு முன்பாக, அதாவது பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில்,

சிவ யோகத்தில், அங்குள்ள சிவதலத்தில் சந்தித்து அவர் தரும் பொருள் எதுவாயினும், பெற்றுக்கொண்டு வரவேண்டும் என்பது உத்தரவு. ஆனால் நேரத்தில் இத்துணை துள்ளியத்தைக் காட்ட வேண்டிய காரணத்தைத்தான் யோசித்துக் கொண்டு வந்தேன்,

ஓ அப்படியா செய்தி.. அது இருக்கட்டும், என்னை எதற்காக அனுப்பி இருப்பார்கள். உன் அளவுக்கு எனக்கு விவரம் தெரியாதே... ஏதோ பாம்பு பிடித்து பிழைப்பை நடத்துகிறவன் நான் ..

விசயம் இல்லாமல் இல்லை குமரா.... இத்தனையும் சொன்ன நான் ஒன்றை மறந்து விட்டேன், அது ஒரு ராகுகாலம்.

இன்று....

நீச்சல் தெரியாமல் மூச்சுக்குழல் திணற அல்லோகல பட்டுக்கொண்டிருந்த அவன், அந்த இளம்மஞ்சள் நிறத்து நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் நேரம், ஏதோ ஒன்று தன்னை நோக்கி வருவதை உணர்ந்து கொள்ள அதே நேரம் நீரின் சுழல் அவனை அதற்கு எதிர் புறமாகத் திருப்பியது. திரும்பியவனின் கண்கள் நிலைகுத்தி நிற்க, அவனுக்கு முன்னே, அவனை விட மூன்று மடங்கு பெரிய ஒரு பாம்பு வளைந்து நெளிந்து நீந்தி வந்து கொண்டிருந்தது. அவனை நோக்கி வந்த அதன் கன்னத் தசைகள் இறகாய் விரிய, சீரியபடி தன் கடிவாயை அதன் விஷ பற்கள் தெரிய வாயை திறந்த நேரம்.

டேய்... ருத்ரா ... எழுந்திரி டா .. ஏன்டா கத்துற.... டேய்...

அசோக் அந்த பாம்பு... தண்ணி....

ம் டிராகுலா, டைனோசர் ன்னு சொல்லேன்..? night duty முடிச்சுட்டு வந்து இப்பதாண்டா படுத்தேன், ஏன்டா இப்படி கத்தி சாவடிக்குற,

இல்ல மச்சான் ஒரு கெட்ட கனவு..

பாக்குறது பூரா பேய்ப்படம், படிக்குறது பூரா திகில் கதை, அப்பறம் கெட்ட கனவு வராம... தமன்னவா வந்து டான்ஸ் ஆடும். ஏன்டா சென்னை போகனும் - னு லீவ் போட்டு தானே வந்த, போய் தொலைய வேண்டியது தானேடா,

மச்சான் கிளம்பிடுறேன் டா என்னை கொண்டு வந்து விட்டுட்டு அப்பறம் தூங்கு சரியா...

எது?

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்,

டேய் ருத்ரா உள்ள போ..சென்னை சென்னை - ன்னு கூவிட்டு இருப்பானுங்க.. ஏதாவது ஒரு வண்டில ஏறி போய்டு. திவ்யா வர சொல்லி call பன்னா, என்னன்னு போய் பாக்குறேன்.

என்னடா உன் ஆளு வந்ததும் ப்ரெண்ட் அஹ் கட் பண்ணிட்ட பாத்தியா....

ஆமா இவரு சின்ன நொள்ள, ஏறி போடா டேய், அப்பறம் ஜன்னல் சீட்டா பாத்து உக்காந்து நல்லா ஆறு மணி நேரம் தூங்கு, சும்மா எதையாவது படிச்சுட்டு பாம்பு பல்லின்னு போன் பண்ணி சாவடிக்காத..

சரிடா ஓவரா பண்ணாத, வாரேன் டா bye.

திருச்சிற்றம்பலம்

ஆறு மணி நேரத்திற்கு பிறகு, ருத்ரா... அசோகிற்கு போன் செய்கிறான்.

ஏண்டா கொஞ்ச நேரம் உன் தொல்லை இல்லாம இருந்தேன். அதுக்குள்ள என்னடா உனக்கு பிரச்னை.

மச்சான் நெஜமாவே பிரச்னை தான்டா,

நான் சென்னை பஸ்ல தான்டா ஏறினேன். இப்ப என்னடானா, தஞ்சாவூர் பக்கம் ஏதோ ஒரு பஸ்ல போய்ட்டு இருக்கேன்டா.. கண்டெக்டர் கிட்ட கேட்டா நீ தான் வந்து ஏறுன அப்படினு கதவிடுறான் டா..டிக்கெட் கூட இருக்கு டா.

அறிவுகெட்ட ருத்ரா... மாத்தி பஸ்ல ஏறிட்டு கண்டெக்டர் கிட்ட போயி சண்டைக்கு போனியா. மூடிட்டு அடுத்த ஸ்டாப்ல இறங்கி சென்னைக்கு கிலம்புற வழிய பாரு...

நான்தான் மாறி ஏறிட்டேன்னு சொல்றியா..?

ஆமாடா நீ பெரிய வென்ன உன்ன கடத்த போறாங்களா... ருத்ரான்னு பேரு வச்சா எல்லாமே திரில்லாதான் யோசிப்பியா. சொன்னத செய்டா வை போன...

கண்டெக்டர் அண்ணே! இப்ப நான் சென்னை போகனும், ஏதாவது வழி சொல்லுங்க,

தம்பி அடுத்த ஸ்டாப்ல இறங்குனிங்கனா. கொஞ்ச நேரத்துல ஒரு பஸ் வரும் அதுல ஏறி புதுக்கோட்டை போய்டுங்க. அங்க இருந்து சென்னைக்கு பஸ் இருக்கும். பட்டுக்கோட்டை ல நைட் தான் பஸ்.

சரின்னே.. நீங்க சொல்ற மாறியே பண்றேன். நான் எங்க இறங்கனும்.

அடுத்த ஸ்டாப் "திருச்சிற்றம்பலம்".

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

நிதானம் தவறிக்கெட்டு! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பரிசு..! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

புகைச்சல்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

மார்பிலே பட்ட காயம்! - ஒரு ராணுவ வீரரின் கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க