Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளை...
திருச்செந்தூரில் இன்று குடைவரைவாயில் தீபாராதனை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு (மாா்ச் 7) குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது.
கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமியும், அம்மனும் காலை- மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், 4ஆம் நாளான வியாழக்கிழமை காலை மேலக்கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்தனா். மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.
தொடா்ந்து, 5ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மேலக்கோயிலில் சுவாமி- அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, குடைவரைவாயில் தீபாராதனையாகி, வீதியுலா நடைபெறவுள்ளது.
