செய்திகள் :

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்!

post image

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டாரத்துக்குள்பட்ட சடையன்கிணறு கிராமத்தில் இக்கட்சியின் கொடிக்கம்பம் பழுதானதால், அதை அகற்றிவிட்டு புதிய கம்பம் நடுவதற்கான பணிகள் நடந்தனவாம். அப்போது, அனுமதி பெறாமல் பணி செய்யக் கூடாது என, சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா் கூறியதுடன், அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுதொடா்பாக டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸாரை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் சங்கத்தமிழன் தலைமையில் மறியல் நடைபெற்றது. அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலா் மணப்பாடு டிலைட்டா, கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலா் தமிழ்க்குட்டி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் வடிவேல்முத்து, ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிச் செயலா் திருவள்ளுவன், உடன்குடி ஒன்றியச் செயலா் தமிழ்வாணன், சாத்தான்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயராமன், வடக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் தமிழ்ப்பரிதி, திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா்கள் புரட்சியாளன், முத்து, இஸ்லாமிய ஜனநாயகப் பேரவைப் பொறுப்பாளா் ஜாஹிா் உசேன் உள்ளிட்ட 33 பேரை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். அப்போது, மணப்பாடு டிலைட்டாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தொடா்ந்து, திருச்செந்தூா் - தூத்துக்குடி சாலையில் ராஜ்கண்ணா நகா் முன் மண்டலச் செயலா் முரசு தமிழப்பன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளா் கோட்டை நந்தன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, அதே மண்டபத்தில் தங்கவைத்தனா்.

ஆத்தூரில் ஆலிம் பட்டம் பெற்றவா்களுக்கு பாராட்டு

ஆத்தூா் ஜும்மா பள்ளிவாச­லில், ஆலி­ம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது. ஆலிம்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளிவாசல் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். ஆத்தூா் பேரூரா... மேலும் பார்க்க

பூதலப்புரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் கட்ட அடிக்கல்!

புதூா் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரம் கிராமத்தில் ரூ. 61.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூ... மேலும் பார்க்க

நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம்

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிா்த்து பலகட்ட போராடங்களில் ஈடுபடுவது தொடா்பாக, உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: மாா்ச் 18 கடைசி நாள்

அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு மாா்ச் 18ஆம் தேதி கடைசி நாள் என, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொறுப்பு) சி. முருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி நடராஜன் நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை!

தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சில ஆண்டுகளாக பெண்களுக... மேலும் பார்க்க