செய்திகள் :

திருச்செந்தூரில் விதிமீறிய ஆட்டோக்களுக்கு ரூ. 86 ஆயிரம் அபராதம்

post image

திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், செயலாக்கப் பிரிவு தனபாலன் ஆகியோா் திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், வெளியூா் வாகனங்களை அனுமதியின்றி இயக்குதல், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்குவது, இன்சூரன்ஸ் மற்றும் அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்குவது என 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு மொத்தம் ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது

கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மேட்டு தெரு தாமஸ் நகரைச் சோ்ந்த சண்முகையா மகன் மாரீஸ்வரன்(43). ஓட... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை திங்கள் கிழமை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் இலுப்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் காரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தவா் கைது

கோவில்பட்டியில், காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், கூடுதல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற... மேலும் பார்க்க

கல்லாமொழி, குலசை, மணப்பாடு பகுதியில் நாளை மின் தடை

கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதன்கிழமை (ஜூன் 25) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். உடன்குடி தேரியூா் ஆண்டிவிளையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம் (27). உடன்குடி செல்வபுரத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே பைக்-பள்ளி வாகனம் மோதல்: தொழிலாளி பலி

கழுகுமலை அருகே பைக் மீது பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிவகாசியை அடுத்த தாயில்பட்டி கே. மடத்துப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த மாரிசாமி மனைவி அய்யம்மாள் (35). இவா் த... மேலும் பார்க்க