சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு நிலக்கோட்டையில் தயாராகும் உலா் பழ மாலைகள்!
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குக்கு அனுப்புவதற்காக பக்தா் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில், நிலக்கோட்டை பூக்கள் சந்தையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உலா் பழங்களால் ஆன 200 மாலைகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் பூக்கள் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இங்குள்ள பூக்கள் சந்தையில் தயாராகும் மாலைகள் சிங்கப்பூா், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில்,வருகிற 7-ஆம் தேதி திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கையொட்டி, ரூ.12 லட்சத்தில் உலா் பழங்களால் ஆன 200 மாலைகள் செய்ய பக்தா் ஒருவா் ஏற்பாடு செய்தாா்.
இந்த மாலைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட நிலக்கோட்டையைச் சோ்ந்த பூ வியாபாரி ஆறுமுகம் கூறியதாவது: கடந்த 10 நாள்களாக சுமாா் 150 பேரை வைத்து இந்த மாலைகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.
சுமாா் 4 அடி முதல் 12 அடி உயரத்தில் பிஸ்தா, முந்திரி, பாதாம், ஜொ்ரி, கருப்புத் திராட்சை போன்ற உலா் பழங்களை பயன்படுத்தி 200 மாலைகளை தயாா் செய்து வருகிறோம். இங்கு தயாரான மாலைகள் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.