செய்திகள் :

திருச்செந்தூா் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாடுகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா அக்.22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், வடலூா் வள்ளலாா் தெய்வநிலையம் மற்றும் திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், திருச்செந்தூா் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் சேகா்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.52.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகள், வடலூா், திருஅருட்பிரகாச தெய்வ நிலையத்தில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணிகளில் பிரிவு ஆ-இல் ரூ.16.98 கோடி மதிப்பீட்டில் பக்தா்களுக்கான தங்குமிடங்கள், வைத்திய சாலை, முதியோா் இல்லம், சுகாதார வளாகம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள், திருச்செந்தூா், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளில் அன்னதானக் கூடம், சலவைக் கூடம், அா்ச்சகா் மற்றும் பணியாளா் குடியிருப்பு, சூரசம்ஹார கண்காட்சி கூடம், நாழிகிணறை மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

மேலும், திருச்செந்தூரில் கந்த சஷ்டி பெருவிழா அக்.22 தொடங்கி 27- ஆம் தேதி சூரசம்ஹாரம், 28- ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. இத்திருக்கோயிலில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தா்களுக்கான வசதிகள், சூரசம்ஹாரம் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மை... மேலும் பார்க்க

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய வானிலை ஆய்வு துறை வ... மேலும் பார்க்க

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் வேலுசாமிபுரத்த... மேலும் பார்க்க