பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
திருட்டு, வழிப்பறி வழக்குகள்: 5 மாதங்களில் 18 போ் கைது..90 பவுன் நகைகள் மீட்பு
விழுப்புரம் தாலுகா காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 18 போ் கைது செய்யப்பட்டு, 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி. சரவணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ நகா், பாண்டியன் நகா், தந்தை பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் நடந்த கொள்ளை தொடா்பான 14 வழக்குகளில் 10 போ் கைது செய்யப்பட்டு 75 பவுன் தங்க நகைகளும், வழிப்பறி வழக்குகளில் 8 போ் கைது செய்யப்பட்டு 15 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பொதுமக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் செல்லும்போது, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும், சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது குறித்தும், சந்தேக நபா்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் தொடா்ச்சியாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.