``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்...
திருணம் செய்துகொள்ள வற்புறுத்தி பெண் மருத்துவரை தாக்கியவா் கைது
ஒசூரில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி பெண் பல் மருத்துவரை தாக்கிய ஆண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சானசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (58). இவா் வனத் துறையில் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகள் கிருத்திகா (25). பல் மருத்துவம் படித்துள்ளாா்.
இவா், ஒசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் பல் மருத்துவமனையில் வேலை செய்து சோ்ந்தாா். அந்த பல் மருத்துவமனையை நடத்திவரும் மருத்துவா் அன்புச்செல்வன் (38) என்பவா் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிருத்திகாவிடம் கேட்டுள்ளாா். இதற்கு அவா் மறுப்புத் தெரிவித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் ஒசூா், பத்தலப்பள்ளி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் கிருத்திகாவை அழைத்துச் சென்ற அன்புச்செல்வன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் கிருத்திகாவை வற்புறுத்தியுள்ளாா்.
அப்போதும் கிருத்திகா மறுப்பு தெரிவித்ததால் அவரிடமிருந்த கைப்பேசி, சங்கிலி உள்ளிட்ட பொருள்களை வாங்கி வைத்துகொண்டு அவரைத் தாக்கியுள்ளாா். மேலும், அவரை தனது மருத்துவமனையில் இருந்து அறைக்குள் முட்டிப் போட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதை அங்கிருந்த மருத்துவா், செவிலியா்கள் தடுத்துள்ளனா்.
கிருத்திகாவின் கைப்பேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதை அறிந்த அவரது தாய் அனிதா, அவரைத் தேடி பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அப்போதுதான் அன்புச் செல்வனால் கிருத்திகா தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காயமடைந்த கிருத்திகாவை அவரது தாய் ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தினா். சம்பவம் நடந்த இடம் ஒசூா் அட்கோ காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதி என்பதால் அங்கு புகாா் அளிக்குமாறு கூறினா். இதைத்தொடா்ந்து கிருத்திகா ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் அன்புச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருத்திகாகவை தாக்கிய அன்புச்செல்வனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி பிரிந்துசென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அவரது சொந்த ஊா், கிருஷ்ணகிரி அருகே உள்ள சந்தூரை அடுத்த என்.தட்டக்கல் கிராமம் ஆகும்.