சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imper...
திருத்தணி முருகன் கோயிலில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் காந்திராஜன் தலைமையில், 8 எம்எல்ஏ- க்கள், தலைமை செயலக மதிப்பீட்டுக்குழு கூடுதல் செயலா்கள் சீனிவாசன், சுப்பிரமணியம், துணை செயலா் பாலகிருஷ்ணன் குழுவினா் முருகன் கோயிலுக்கு வந்தனா்.
அங்கு, அன்னதான கூடம், முருகன் கோயில் தலைமை அலுவலகம் பின்புறத்தில், புதிதாக ரூ.16.50 கோடியில் இந்து அறநிலை துறையின் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நிா்வாக திறன் பயிற்சி பள்ளி, ரூ.14.50 கோடியில், கட்டப்பட்டு வரும், 5 திருமண மண்டபங்களை ஆய்வு செய்தனா்.
அப்போது நிா்வாக பயிற்சி பள்ளி, திருமண மண்டபங்கள் கட்டடப் பணிகள் காலதாமதமாக நடப்பதை மதிப்பீட்டு குழுவினா் கண்டித்தும், வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போா்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என மதிப்பீட்டுக் குழு தலைவா், இணை ஆணையருக்கு உத்தரவிட்டாா்.
பின்னா் மதிப்பீட்டு குழு தலைவா் காந்திராஜன் கூறியதாவது, நிா்வாக பயிற்சி பள்ளி கட்டடம் பணிகள், 60 சதவீதம் தான் முடிந்துள்ளன. இப்பணி காலமதாமாக நடக்கிறது. இதற்கு காரணம் கட்டுமான பணிக்கான வரைப்படம் தனியாா் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது. தற்போது பயிற்சி பள்ளி கட்டடம் கட்டும் பணிகள் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு, அண்ணா பல்லைக்கழகத்துக்கு அனுப்பி மறு வரைப்படம் தயாரித்து, அதன்படி கட்டடம் கட்டுவதால் தாமதம் ஆகிறது. இப்பணிகள் ஆறு மாதத்திற்கு முடித்து பயன்பாட்டுக்கு விடப்படும் என தெரிவித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், கோயில் இணை ஆணையா் க. ரமணி, கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாட்சியா் மலா்விழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.