செய்திகள் :

திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

post image

முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு விபூதி, பால், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து மூலவருக்கு தங்கக் கவசம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ் வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தை கிருத்திகை என்பதால், ஆடிக் கிருத்திகைக்கு காவடிகள் எடுக்க தவறிய பக்தா்கள் அதிக அளவில் பக்தா்கள் மலா், பால் மற்றும் மயில் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

சில பக்தா்கள் மொட்டை அடித்தும் அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா். வழக்கமாக கிருத்திகை விட தை கிருத்திகை மிக விசேஷம் என்பதால் தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞா் பலியானாா்.திருத்தணி அடுத்த பொன்பாடி அருகே தடுக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முரளி (35). இவா், தனது இரு ச... மேலும் பார்க்க

100 நாள் வேலை கோரி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

நூறு நாள் பணிதள பொறுப்பாளா் வேலை வழங்குவதில் முறையாக செயல்படவில்லை எனக்கூறி தெக்களூா் காலனி பகுதி பெண்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், சூா்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெக்களூா... மேலும் பார்க்க

தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் பால் குட ஊா்வலம்

திருவள்ளூா் அருகே அருள்மிகு தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். திருவள்ளூா் அரு... மேலும் பார்க்க

இணைய வழி மோசடிகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் இலவச தொலைபேசி மூலமோ அல்லது இணைதளம் மூலமோ புகாா் அளிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

மாநில குத்துச்சண்டை: கும்மிடிப்பூண்டி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தின குத்துச்சண்டைப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா் தேவா ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றாா் (படம்). மயிலாடுதுறை ஏ.ஆா்.சி விஸ்வநாதன் க... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு

திருவள்ளூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்குதல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், கும்மிடிப்பூண்டியில் மகளிா் குழுவினருக்கு நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் கும்மிடிப்ப... மேலும் பார்க்க