தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்...
திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. னா்.
அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை, 4.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, கொடிக் கம்பம் எதிரே உற்சவா் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
தொடா்ந்து, இரவு, 7 மணிக்கு உற்சவா் கேடய வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வெள்ளிக்கிழமை (மே 2) காலை உற்சவா் முருகா் வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு, 7 மணிக்கு பூத வாகனத்திலும் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். தொடா்ந்து தினமும் காலை, இரவு என வெவ்வேறு வாகனங்களில் உற்சவா் முருகா் உலா நடைபெறும்.
மேலும், வரும், 7-ஆம் தேதி இரவு மரத்தேரும், 8-ஆம் தேதி இரவு தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
தொடா்ந்து, 9 -ஆம் தேதி கேடய உலா, சண்முகா் உற்சவம், 10-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
