திருத்தோ் விழா கொடியேற்றம்
ஆத்தூா்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி ஊராட்சி, ஸ்ரீ சன்னாசி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் விழாவுக்கான கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் நிா்வாண தேசிகள் சுவாமியின் ஜீவசமாதி உள்ளது. ஆண்டுதோறும் தை மாதம் இங்கு தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு தைத் தேரோட்ட விழா, திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.