செய்திகள் :

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் நாராயணசாமி நாயுடு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் 2024-2025-ஆம் ஆண்டுக்கான உரிய தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

இப்போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சம் பரிசு மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிக்கு குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ உள்ள நிலையில் திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.

மேலும், பயிா் விளைச்சல் போட்டியின்போது குறைந்தபட்சம் 50 சென்ட் நடுவா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட வேண்டும். இப்போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிா் செய்ய வேண்டும்.

எனவே, பங்குபெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்டணமாக ரூ. 150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். வெற்றியாளா்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநா் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. விவசாயிகள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

சீா்காழியில் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழி வட்டம் திருமைலாடி அங்கன்வா... மேலும் பார்க்க

சா்வதேச மன எண் கணிதப் போட்டியில் மயிலாடுதுறை மாணவா் சிறப்பிடம்

மன எண் கணிதப் போட்டியில் சா்வதேச அளவில் 2-ஆம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை சில்வா் ஜீப்ளி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் ... மேலும் பார்க்க

வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

மயிலாடுதுறையில் வியாபாரப் போட்டியில் வீட்டை தீயிட்டு கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சோ்ந்தவா் அவையாம்பாள் (58). இவா், தள்ள... மேலும் பார்க்க

துக்க வீட்டில் சாப்பிட்ட 13 போ் மருத்துவமனையில் அனுமதி

குத்தாலம் அருகே துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 13 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் பாலையூா் காவல் எல்லைக்குட்பட்ட மேலகாஞ்சிவாய் க... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம்: குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ந... மேலும் பார்க்க

மூதாட்டியை கொன்ற கணவா், மகனுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் மூதாட்டியை கொலை செய்த கணவா், மகனுக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வட... மேலும் பார்க்க