ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை
திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம்; காணிக்கை அளித்த பக்தர் குறித்து ஆந்திர முதல்வர் சொல்வது என்ன?
ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்குத் திருப்பதி ஏழுமலையான் பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் காணிக்கையாகச் செலுத்தவிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மங்களகிரியில் 'வறுமை ஒழிப்பு' திட்டம் P4 இல் உரையாற்றிய நாயுடு, "அந்தப் பக்தர் தெய்வத்துக்குத் திருப்பிக்கொடுக்க முடிவு செய்தார்" எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு கூறியதன்படி, பெயர் குறிப்பிடாத அந்தப் பக்தர் தனது நம்பிக்கையின்பால் திருப்பதி ஏழுமலையான் சுவாமியை வணங்கி ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
தற்போது நிறுவனத்தின் 60% பங்குகளை விற்று, சுமார் 6000-7000 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். கடவுளுக்கு நன்றி உணர்வைக் காட்டும் வகையில் தற்போது காணிக்கை அளிக்கவுள்ளார்.
இதுகுறித்துப் பேசும்போது, "திருப்பதி ஏழுமலையான்தான் அவருக்கு அந்தச் செல்வத்தை அளித்துள்ளார்" என்றும் குறிப்பிட்டுள்ளார் சந்திரபாபு.

மேலும், திருப்பதி ஏழுமலையான் திரு உருவச்சிலை தினமும் 120 கிலோ ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் என்றும், அதை அறிந்த பக்தர் 121 கிலோ தங்கம் அளிக்க முன்வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்தத் தங்கத்தின் மதிப்பு 140 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.