திருப்பத்தூரில் விடிய விடிய மழை
திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது.
திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு முழுதும் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சூழல் நிலவியது.