செய்திகள் :

திருப்பத்தூர்: குவியும் குப்பையால் முகம் சுளிக்கும் வாகன ஓட்டிகள்... தி.மலை நெடுஞ்சாலை அவலம்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் அருகே உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில் சில மாதங்களாகக் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது.

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, ``கடந்த சில மாதங்களாகத் தான் இது இப்படி இருக்கிறது. இரவு நேரங்களில் எங்கு இருந்தோ வருகிறார்கள், குப்பைகளை மூட்டை கட்டி வீசிச் செல்கிறார்கள். ஏதாவது கேட்டால் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள். இதனால் எங்களுக்குத்தான் துர்நாற்றமும் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இவ்விடத்தில் ஒரு நிமிடத்தில் பல வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளை முகம்சுளிக்க வைப்பதோடு சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் தான் எங்கள் வீடுகளும் கடைகளும் உள்ளது. இங்கு பிழைப்பு நடத்துவதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் தவிர்த்து, மக்காத பிளாஸ்டிக் பொருள்கள், கோழிக் கழிவுகள் எனப் பல்வேறு வகையான கழிவுகளை இங்கே தூக்கி வீசிச் செல்கின்றனர். இந்தக் குப்பை கொட்டுகின்ற இடத்திற்கு அருகில், ஏரிக்குத் தண்ணீர் செல்வதற்குக் கால்வாய் இருப்பதால், இந்த குப்பைகளால் ஏரி தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த இடத்தை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும்தான் பார்வையிடுகிறார்கள். அதிகாரிகள் இவ்விடத்தை அடிக்கடி கண்காணித்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற சூழல் உருவாகியிருக்காது.

தவறு மக்கள்மீதும் தான் இருக்கிறது. குப்பைத்தொட்டி இருந்தும் கீழேதான் கொட்டிவிட்டுப் போகிறார்கள். அதே நேரம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்படித்தொட்டிகள் கிடையாது. அதனால்தான் இப்படிக் குப்பைகள் நிரம்பிக் காணப்படுகிறது. எனவே, இவ்விடத்தில் ஒரு குப்பைத் தொட்டி ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர். 

இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ``நான் இந்த ஊருக்கு புதுசு. ஒரு சில மாதங்களுக்கு முன்பாகத்தான் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். இந்த வழியை நான் முதலில் கடக்கும் போதே யோசித்தேன்... `திருப்பத்தூர் நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது' என்று பலகையில் இருந்தது. இப்படி இருந்தால் அன்புடன்‌‌ எங்கு வருவது, நோயுடன்தான் வரமுடியும்" என்று கூறுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ``நாங்களும் அடிக்கடி இவ்விடத்தைச் சுத்தம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சமூகவிரோதிகள் இவ்விடத்தில் குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். பெரும் நோய்த் தொற்று ஏதும் பரவுவதற்கு முன்னர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறோம்" என்றனர்.

Seeman: ``சீமான் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார்... நடந்தது இதுதான்'' - பபாசி நிர்வாகிகள் காட்டம்

நூல் வெளியீட்டு விழாவில் சீமான்சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.இதில் கடந்த ஜனவரி 4-ம் தேதி 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' என்ற... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து; சுட்டிக்காட்டிய விகடன்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்குவழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டி... மேலும் பார்க்க

OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அனுமதி இல்லை; 'ஓயோ'-வின் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!

இந்தியா முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் பல தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது பிரபல 'OYO' நிறுவனம்.திருமணமாகாதவர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லோருக்கும் அனுமதி வழங்கி வந்தது 'OYO'... மேலும் பார்க்க

GST: ரூ.40 லட்சம் வருமானம்... பானிபூரி விற்பவருக்கு வந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்! - என்ன நடந்தது?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஒருவருக்கு ஜி.எஸ்.டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பானிபூரி விற்றதின் மூலம் அந்தப் பானிபூரி விற்பனையாளரின் ஆண்டு ... மேலும் பார்க்க

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், "சிந்துவெளி நா... மேலும் பார்க்க