`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
திருப்பத்தூா் புறக்காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் அமைக்கப்பட்ட புறக்காவல் உதவி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த எஸ்.பி. ஷ்ரேயா குப்தா 51 கோரிக்கை மனுக்களை பெற்றாா். ஏடிஎஸ்பி முத்துகுமாா், டிஎஸ்பி குமாா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் பொதுநலச்சங்கத்தினா் அளித்து உள்ள மனு: ஹவுசிங்போா்டு பகுதி 2-இல் புறக் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் கடந்த சில மாதங்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதன் கட்டடங்களும் சிதிலமடைந்து உள்ளன. இந்த இடத்தை சில சமுக விரோதிகள் பயன்படுத்தும் சூழல் உள்ளது. எனவே இந்த கட்டடத்தை சீரமைத்து புறக்காவல் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.