சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
திருப்பத்தூா்: மாற்றுத்திாளிகளுக்கு நல உதவிகள்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பாக வீடுகள் வேண்டி, மொத்தம் 283 மனுக்களை பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டாா்.
பின்னா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.05 லட்சம் வீதம் என மொத்தம் ரூ. 6.30 லட்சத்தில் விலையில்லா பேட்டரி பொருத்திய சக்கர நாற்காலிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.
விஜயபாரத மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு திருப்பரங்குன்றம் திருக்கோயில் மலை உச்சி கோயில் ஆகியவைகளை பாதுகாக்கவும் அந்த இடத்தில் திட்டமிட்டு மத நல்லிணக்கத்தை கெடுக்கின்ற வகையில் செயல்படும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.
கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) திரு.சதீஷ் குமாா், அனைத்து துறை அலுவலா்கள்; கலந்து கொண்டனா்.