திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கசிவு, சிகரெட் சூடு!
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மருத்துவப் பரிசோதனை வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் பலியானார்.
இந்த விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் உடலில் வெளிப்புறத்தில் சிராய்ப்புக் காயங்கள் என 50 காயங்களும் ரத்தக் கட்டுக் காயங்களும் இருந்துள்ளன.
வயிற்றின் நடுவே கம்பால் குத்தியும், தலையில் தாக்கியதால் கபாலத்தினுள் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் சிகரெட் சூடும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொடூரத் தாக்குதலின்போது, அஜித்குமாருக்கு கஞ்சா அளிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் விடியோவை கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக அந்த விடியோ அமைந்துள்ளது.
தமிழகத்தையே உலுக்கியுள்ள வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Medical Report of victim AjithKumar