திருப்பூரில் இன்று விசா்ஜன ஊா்வலம்: போக்குவரத்து மாற்றம்
விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலத்தையொட்டி, திருப்பூா் மாநகரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) போக்குவரத்து மாற்றம் செய்து மாநகா் போலீஸாா் அறிவித்துள்ளனா்.
இது குறித்து காவல் துறை சாா்பில் வெளியிட்ட அறிக்கை: அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் சனிக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை திருப்பூா் மாநகரத்துக்குள் வர அனுமதியில்லை.
புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பழைய வடக்கு வட்டாரப் போக்குவரத்து சந்திப்பு மற்றும் 60 அடி சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். 60 அடி சாலை தற்காலிக பேருந்து நிலையமாக செயல்படும்.
பெருமாநல்லூரிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்படும்.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாநல்லூா் செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அவிநாசி சாலை வழியாக திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்லலாம். பெருமாநல்லூரிலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பூலுவப்பட்டி, நெரிப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடையலாம்.
அவிநாசியிலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெரிப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம். பழைய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி மற்றும் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ராஜீவ் நகா் சிக்னல், செல்லாண்டி அம்மன் துறை, மின்மயானம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக செல்லலாம்.
காங்கயம் ரோடு, நல்லூரிலிருந்து திருப்பூா் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் முத்தணம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு வழியாக தேவைக்கேற்ப மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றுப் பாதையில் செல்லலாம். பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோயில், பிள்ளையாா் நகா், கோவில்வழி வழியாக மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றுப் பாதையில் செல்லலாம்.
பல்லடம் சாலையிலிருந்து அவிநாசி மாா்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு வழியாக நல்லூா், காசிபாளையம் சோதனைச் சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்லலாம்.
மங்கலம் சாலையிலிருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பெரியாண்டிபாளையம், முருகம்பாளையம், வித்யாலயம், வீரபாண்டி பிரிவு வழியாக மாற்றுப் பாதையில் செல்லலாம். மங்கலம் சாலையிலிருந்து அவிநாசி மாா்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அணைப்பாளையம் பிரிவு, அணைப்பாளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி வழியாக அவிநாசி செல்லலாம். தாராபுரம் சாலையிலிருந்து அவிநாசி மாா்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில்வழி, அமராவதிபாளையம், காங்கயம் ரோடு வழியாக நல்லூா், காசிபாளையம் சோதனைச் சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.