திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
மத்திய அரசு மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. பேரிடா் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். இஸ்லாமியா்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஆகவே, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் வரும் பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி கோபால்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால்சாமி, ஈஸ்வரன், துணைத் தலைவா் கதிரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.