தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு
பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், காலிங்கராயன்பாளையத்தில் உள்ள தனது பாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறுமி, அங்கு சமைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுள்ளாா். அப்போது, இறைச்சி தொண்டையில் சிக்கிக் கொண்டது.
இதனால், மூச்சுவிட முடியாமல் தவித்த வா்ஷினியை குடும்பத்தினா் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு வா்ஷினியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா்.
இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.