திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
திருப்பூர்: திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் பனியன் நிறுவனத்தில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் தனியாருக்கு செந்தமான பனியன் நிறுவனம் ஒன்றில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென நிறுவனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரிய தொடங்கியது.
இதையும் படிக்க |புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
தீ விபத்தை அடுத்து பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிவதால் எழுந்த கரும்புகையால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.