திருப்பூர்: குளத்தில் மூழ்கி இன்ஸ்டா நண்பர்கள் பலி!
நண்பரைக் காண திருப்பூர் சென்ற சென்னையைச் சேர்ந்தவர் உள்பட மூவர் குளத்தில் மூழ்கி பலியாகினர்.
திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் 3 பேரின் சடலங்கள் மிதப்பதாக காவல்துறையினர் சனிக்கிழமையில் (டிச. 21) தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத ஒரு பள்ளி மாணவி, இரு இளைஞர்கள் என 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணையும் நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்தவர்களில் பள்ளி மாணவியும், அவரது நண்பரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பதும் தெரிய வந்தது. மேலும், ஆகாஷும் பள்ளி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த நிலையில், சிறுமியைக் காண உடுமலைப்பேட்டைக்கு ஆகாஷ் வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆகாஷ், சிறுமி, அவரது நண்பர் ஆகிய மூவரும் பைக்கில் ஒன்றாகச் சென்றுள்ளனர். இந்த நிலையில், மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தின் அருகே பைக்கில் சென்றபோது, நிலைதடுமாறி, குளத்தினுள் மூழ்கி, உயிரிழந்தனர்.
இதையும் படிக்க:திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? - அண்ணாமலை கேள்வி!