திருமணத்தில் `ஊதா கலர் டிரம்' கிப்ஃட்; `மீரட் கொலை' நினைவால் மணமகன் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து கடந்த மாதம் தன் கணவரை கொலை செய்தார். அதோடு கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி அதனை ஊதா கலர் டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு மூடினார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து வட இந்தியாவில் `ஊதா கலர் டிரம்' பிரபலமாகி வருகிறது. சிலர் கிப்ஃட்டாக `ஊதா கலர் டிரம்' கொடுப்பது பிரபலமாகி வருகிறது.

அதேசமயம் ஊதா கலர் டிரம்மை பார்த்தாலே ஆண்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான ஆண்கள் தங்களுக்கு தங்களது மனைவி கொலை மிரட்டல் விடுப்பதாக போலீஸில் புகார் செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் ஹமீர்புரில் நடந்த திருமணத்தில், மணமகளுக்கு அவர்களின் நண்பர்கள் `ஊதா கலர் டிரம்' கிப்ஃட்டாக கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனை பார்த்து மணமகன் அதிர்ச்சியாகி என்ன சொல்வது என்று தெரியாமல் ஜெர்க்காகி நின்றார். ஆனால் அந்த டிரம்மை பார்த்த மணமகள் சிரித்துவிட்டார். கிப்ஃட் கொடுத்த நண்பர்களும் சிரித்தனர். பிராங்க் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று ஊதா கலர் பிளாஸ்டிக் டிரம் கொடுத்திருந்தனர். அந்த டிரம்மில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.
மணமேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர். அனைவரும் மீரட் சம்பவத்தை நினைத்து இது போன்று சிரித்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
அதனை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில்,"உலகமே நோய்வாய்ப்பட்டுவிட்டது, ஒவ்வொரு தெருவிலும் மக்கள் இந்தப் படுகொலையை கேலி செய்கிறார்கள். இது போன்ற ஏதாவது அவர்களுக்கு நடக்கும்போது, அவர்கள் வலியை உணர்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவர்கள் என்ன மாதிரியான நண்பர்கள்? அவர்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்'' என்றார்.
இது போன்ற பிராங்க் வெளியிடுபவர்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.