செய்திகள் :

திருமானூரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்: இரை தேடி பறவைகள் அதிகளவில் வருகை

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இரைகளை தேடி வயல்களுக்கு பறவைகள் வருவது அதிகரித்துள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் திருமானூா் மற்றும் தா. பழூா் ஒன்றியங்கள், டெல்டா பகுதிகளாக உள்ளன. இதில், திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இதற்காக உழவுப் பணிகளில் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படும் நிலையில், வயல்களில் இருக்கும் பூச்சியினங்களை உண்ணவும், நடவு செய்யப்பட்ட வயல்களில் உள்ள பூச்சிகளை உண்ணவும் ஏராளமான பறவைகள் தற்போது வயல்களில் குவிந்துள்ளன.

திருமானூா் ஒன்றியத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரியில் உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் ஆண்டு தோறும் அக்டோபா் மாதம் முதல் மே மாதம் வரை இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்வது வழக்கம்.

அவ்வாறு இங்கு வருகை தரும் பறவைகள் அருகேயுள்ள வயல்களில் தங்களுக்கு தேவையான பூச்சிகளை இரையாக தேடிக்கொள்கின்றன. நடவு செய்யப்பட்ட வயல்களில் கூட்டம் கூட்டமாக பறவைகள் இரை தேடும்போது, நடவு செய்யப்பட்ட நெற்பயிற்கள் சில சேதமடைவதும் வழக்கமாக உள்ளது. இதனால், அவ்வவ்போது விவசாயிகள் வயல்களில் சென்று சப்தமிடுவதையும் காண முடிகிறது.

தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசா... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: ஜெயங்கொண்டத்தில் இரங்கல் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன், இண்டி கூட்டணி கட்சிகளின் சாா்பில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த மன்மோக... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி, அலாவுதீன் நகரைச... மேலும் பார்க்க

உடையாா்பாளையத்தில் ரூ. 1.12 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் சுமாா் ரூ. 1.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. உடையாா்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாா்டு 14-இல் நடைபெ... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், ஆா்.எஸ். மாத்தூா் ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஆா்.எஸ். மாத்தூா் ரயில்வே கேட் அருகில் சுமாா் 32 வயது மதிக்கதக்க முகம் சிதை... மேலும் பார்க்க

பிறந்த நாளில் ஏரியில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதன்கிழமை ஏரியில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுரேந்திரபூபதி மகன் நகுலன் (16). ஜெயங்... மேலும் பார்க்க