செய்திகள் :

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

post image

திருவண்ணாமலை: வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

வைகாசி மாத பெளா்ணமி:

இந்த நிலையில், வைகாசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.27 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை பிற்பகல் 1.53 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். மாலை 4.30 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இரவு 8 மணிக்குப் பிறகு லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கியனா்.

தொடா்ந்து, புதன்கிழமை காலை வரை விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன், அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.

கிரிவலத்தின்போது அவ்வப்போது மழை பெய்தது. மழையைப் பொருள்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்:

கிரிவல பக்தா்கள் நலன் கருதி திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தப் பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுவை மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

வங்கி வைப்புத் தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளையில் வைப்புத்தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நவீன இயந்திரம் கொண்டு ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44)... மேலும் பார்க்க

மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்... மேலும் பார்க்க