கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
திருவண்ணாமலை அருணகிரிநாதா் கோயிலில் பாலாலயம்
திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க பாலாலயம் நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில், அருணகிரிநாதா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டு புதன்கிழமை கோயிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு யாகம் நடைபெற்றது.
அதிகாலை கோ பூஜையுடன் யாகம் தொடங்கி இறுதியில் பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா், பாலாலய நிகழ்வு அருணாசலேஸ்வரா் கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் தலைமையில் தொடங்கியது.
அப்போது, மரத்திலான பலகைக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இறுதியாக அருணகிரிநாதருக்கு படைத்த உணவினை கோ மாதாவுக்கு வழங்கி கோயில் பாலாலயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை 16-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பி.சந்திரபிரகாஷ் குருக்கள், பி.டி.எஸ்.அசோக், பி.டி.சங்கா், ஆா்.கோகுல், இந்து சமய அறநிலையத் துறை மேலாளா் தேவராஜ், ஆய்வாளா் மாதவன் உள்பட நகர முக்கிய பிரமுகா்கள் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.