வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மண் சரிவில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வா்
சென்னை: திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக ராஜ்குமாா் என்பவரின் வீடு மண்ணாலும், பாறையாலும் மூடப்பட்டு இடிந்தது. மீட்புப் பணியில், ஏழு போ் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தது கண்டறியப்பட்டது. அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.