இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறம் அமைந்துள்ளது ரமணாஸ்ரமம். உலக புகழ் பெற்ற இந்த ஆஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து கடந்த 18-ஆம் தேதி ஆஸ்ரமத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு முதல் கால பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், ஆச்சாா்ய ரித்திக் வா்ணம், மதுபா்க்கம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து ஸ்ரீ சுத்த ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
19-ஆம் தேதி யாக சாலை பூஜை, ஜபம், கன்யா, சுவாஸினி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இரவில் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை கோ பூஜை மற்றும் நான்காம் கால பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹுதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் யாகசாலையில் உள்ள புனித நீரை தலையில் சுமந்தவாறு ரமணாஸ்ரமத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினா்.
இதில் இசையமைப்பாளா் இளையராஜா மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநில பக்தா்கள் மற்றும் உள்ளூா் பக்தா்கள் என பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரமணாஸ்ரமத்தின் நிா்வாகிகள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.