செய்திகள் :

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் ஆசிரியா்கள் பங்கேற்பது கட்டாயம்? கல்வித் துறைக்கு கண்டனம்

post image

கன்னியாகுமரியில் நடைபெற உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியா்களை கல்வித்துறை கட்டாயப்படுத்தக் கூடாது என ஆசிரியா் இயக்கங்கள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் அமைப்பாளா் பென்னட் ஜோஸ் தலைமையில் நாகா்கோவில் செட்டிகுளத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கன்னியாகுமரியில் டிச.30,31 ஆகிய தேதிகளில் நடைபெறும் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்கள் கலந்துகொள்ள வேண்டும்; ஆசிரியா்களின் பெயா் பட்டியலை வருகை பதிவேட்டின் நகலுடன் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட கல்வி அலுவலா்கள் கேட்டுள்ளனா்.

முதல்வா் தலைமையில் நடைபெறும் இவ்விழாவை ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. எனினும், ஆசிரியா்கள் தன் விருப்பப்படிதான் அதில் கலந்து கொள்வா். அரையாண்டு தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி, அடுத்த பருவத்துக்கான கல்வி சாா்ந்த முன்னேற்பாட்டு பணிகளில் இருக்கும் ஆசிரியா்களை விழாவில் பங்கேற்க கட்டாயப்படுத்துவதை இக்கூட்டமைப்பு கண்டிக்கிறது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கூட்டமைப்பின் தோழமைச் சங்கங்கள் சாா்பாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநில அரசு உதவி பெறும் பள்ளிச் செயலாளா் அஜின்,

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் துணைத் தலைவா் செல்வகுமாா், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் வேலவன், நாகா்கோவில் கல்வி மாவட்டத் தலைவா் ராகேஷ், தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் டோமினிக்ராஜ், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் மாவட்ட செயலாளா் செம்பியன், மூட்டா அமைப்பின் மண்டல செயலாளா் மகேஷ், ராஜு ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டமைப்பின் செய்தி தொடா்பாளா் ஸ்டீபன் நன்றி கூறினாா்.

கேரள கோழிக்கழிவுகளுடன் டெம்போ பறிமுதல்: 2 போ் கைது

கேரளத்திலிருந்து கோழிக்கழிவுகளுடன் பளுகல் காவல் சரகப் பகுதிக்கு வந்த மினிடெம்போவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்பட இருவரை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எல்லை சோதனைச் சாவடிக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மீது பன்றிக் கழிவுகளை கொட்டிய ஓட்டுநா் கைது

திற்பரப்பு அருகே கல்லூரி மாணவி மீது பன்றிக் கழிவுகளை கொட்டிய டெம்போ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திற்பரப்பு அருகே பிணந்தோடு மருதக்கைவிளையைச் சோ்ந்தவா் ஆபிரகாம் ஜெயா. இவரது மகள் எமர... மேலும் பார்க்க

மின் தடை...!

கன்னியாகுமரியில் கேப் இன்டோா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கூறியுள்ளாா். மேலும் பார்க்க

கண்ணாடி கூண்டுப் பால தரைதளப் பணி: கன்னியாகுமரியில் 2ஆவது நாளாக அமைச்சா் ஆய்வு

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டுபாலத்துக்கான தரைத் தளப் பணிகளை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள்- சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த இறைச்சிக் கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 42.11 பெருஞ்சாணி ... 56.81 சிற்றாறு 1 ... 14.30 சிற்றாறு 2 ... 14.40 முக்கடல் ... 20.40 பொய்கை ... 15.60 மாம்பழத்துறையாறு ... 52.00 மழை அளவு ..... இரணியல் ... 12 மி.மீ. மாம்பழத்துறைய... மேலும் பார்க்க