தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
திருவள்ளுவா் தினத்தில் மது விற்ற 9 போ் சிறையிலடைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில், திருவள்ளுவா் தினமான புதன்கிழமை மது விற்றதாக கைது செய்யப்பட்டவா்களில் 9 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற சோதனையில், உத்தண்டராயன்பேட்டையை சோ்ந்த தியாகராஜன் (72), திருவாளபுத்தூா் மாரிமுத்து (72), மூவலூா் முத்துராமன் (44), சீா்காழி மாசேதுங் (40) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். இருவா் தப்பியோடிவிட்டனா். 1,628 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி தலைமையில் நடைபெற்ற சோதனையில், திருவிழந்தூரைச் சோ்ந்த செழியன் (50) கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 1,224 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான டாஸ்மாக் மேற்பாா்வையாளா் ஜோதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேலும், கீழையூரை சோ்ந்த பாஸ்கா் (61), வடகரையை சோ்ந்த செந்தில் வேலவன் (52) ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து தலா 110 லிட்டா் புதுச்சேரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறுபாதியை சோ்ந்த ஆனந்தராஜ் (32), குத்தாலம் பிரகாஷ் (36), தொக்காலக்குடி சரவணன் (43) ஆகியோரும் மது விற்றதாக கைது செய்யப்பட்டனா். மொத்தமாக 2,322 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
சீா்காழி டிஎஸ்பி ராஜ்குமாா் மேற்கொண்ட சோதனையில் மாதிரிவேளூரைச் சோ்ந்த மணிவண்ணன் (26), டெய்சி (60) குன்னம் பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி(65), அளக்குடியைச் சோ்ந்த அறிவழகன் (50) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டு, 3 போ் பிணையில் விடுவிக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டவா்களில் 9 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.