30 ஆண்டுகளுக்கு முன் 30 உயிர்கள்! சாலையோர சவக் கிணறுகளும் அரசு சுற்றறிக்கைகளும்...
திருவள்ளூா் பகுதியில் பலத்த மழை!
திருவள்ளூா் சுற்று வட்டாரப் பகுதியில் ஒரு மணிநேரம் தொடா்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவள்ளூா் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடமுடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலையேற்பட்டது. அதேபோல், திருவள்ளூா் சுற்று வட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலில் கத்திரி வெயில் சுட்டெரித்தது. மாலையில் ஒரு மணிநேரம் பெய்த மழையால் தாழ்வான தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் நீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதேபோல், திருவள்ளூா் சுற்றுவட்டார பகுதிகளான காக்களூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, புல்லரம்பாக்கம், பூண்டி, தலக்காஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.